Tuesday, February 4, 2014

ஊடகவியலாளர்களுக்கான உதவி மையத்தின் நோக்கம்

ஊடகவியலாளர்களுக்கான தனித்திறமைகளை வளர்த்தல் என்பதே இந்த மையத்தின் நோக்கமாகும்.

நீண்டகாலமாகவும் தொடர்ச்சியாகவும் தமது பணிகளைச் செய்தவண்ணம் இருக்கும் ஊடகவியலாளர்கள் தமது அன்றாடப்பிரச்சினைகளையும், தேவைகளையும் கூட தீர்த்துக் கொள்வதற்கு சிரமங்கள் பலவற்றை அனுபவிக்கின்றனர்.

அவர்களுடைய சிரமங்கள் காரணமாக முழுமையான சமூக அக்கறையை காண்பிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

அதே நேரம், தங்களுடைய குடும்ப வாழ்விலும், எதிர்காலத்திலும், குழந்தைகளின் எதிர்காலத்திலும் பல இன்னல்களை எதிர் கொள்கின்றனர்.

இவ்வாறான பல விடயங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான  தொழில் விருத்தி சார் பயிற்சிகள், தேவைகளில் முடிந்ததை  நிறைவேற்றல், உதவிகள் சிலவற்றை மேற்கொள்ளுதல், தொழில் உபகரண உதவிகளைச் செய்து கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஊடகக்காரர்களுக்காக உதவி மையம் செயற்படுகிறது.

எமது அமைப்பு மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படாலும், முடிந்தவரையில் தேவைகருதிச் செயற்பட உத்தேசித்துள்ளது.

இதற்கு ஊடகக்காரர்கள் சார்ந்து அக்கறையுள்ள அனைவரும் உதவிகளை வழங்கலாம். தொடர்புகளை ஏற்படுத்தலாம். ஆலோசனை பகிரலாம் என்பது எங்கள் வேண்டுகோள்.


- நன்றி